1. மனிதனின் அன்பொரு நாள்
மாறியே போய் விடலாம் இம் (2)
என் தேவனின் அன்பென்றுமே
மாறாத அன்பு ஐயா (2)
– அன்பு
2. என் கண்ணில் நீர் வழிந்தால்
உம் கண்கள் கலங்கிடுதே (2)
என் கால்கள் சறுக்கும் போது
தாங்கியதுமதன்பு தான்
– அன்பு
3. இயேசுவை தந்தருளி
உலகினில் அன்பு கூர்ந்தார் (2)
சிலுவையில் ஜீவன் தந்து
நேசித்த அன்பிதுதான்(2)
-அன்பு
1. சோதனை சூழ்ந்திட்ட நேரங்களில்
சோராமல் காத்தவர் அவரல்லவா-(2)
வேதனை துன்பம் நீக்கி தினம்
வழுவாமல் காத்தவர் அவரல்லவா- (2)
– உந்தன் நல்ல
2.மனிதர்கள் கைவிட்ட நேரங்களில்
துணையாக நின்றவர் அவரல்லவா-(2)
பெலவீனம் தாக்கின நேரங்களில்
பெலத்தால் தாங்கினதவரல்லவா-(2)
-உந்தன் நல்ல
3.அழுது புலம்பின வேளைகளில்
கண்ணீரை துடைத்தவர் நீரல்லவா-(2)
கலங்கி தவித்த வேளைகளில்
கலங்காதே என்றவர் நீரல்லவா-(2)
– உந்தன் நல்ல
1.சத்துருவை ஜெயிக்க பெலன் தருவார்
சாபங்களை முறிக்க பெலன் தருவார்- (2)
வல்லமையின்
2.தடைகளை உடைக்க பெலன் தருவார்
சோதனையை ஜெயிக்க பெலன் தருவார்-(2)
-வல்லமையின்
3.வியாதிகளை ஜெயிக்க பெலன் தருவார்
சோர்வின்றி நடக்க பெலன் தருவார்- (2)
-வல்லமையின்
4. ஆசீர்வாத மழையை ஊற்றிடுவார்
அதிசயமாக நடத்திடுவார்-(2)
-வல்லமையின்
1.மரண திகில் என்மேல் விழுந்தது
பயமும் நடுக்கமும் பிடித்தது – (2)
வியாகுலம் என்னை மூடிற்று
மீட்டுவார் இல்லையோ
கலங்கி தவிக்கின்றேன் நான்
-அதிகாலை நேரம்
2.நிந்தனை என்னை சூழ்ந்தது
கண்ணிகள் என் மேல் விழுந்தது – (2)
ஆத்துமா தோய்ந்து போயிற்று
ஆதரிப்பார் இல்லையோ
கலங்கி தவிக்கின்றேன் நான்
-அதிகாலை நேரம்
3.உனக்கு எதிராய் எழும்பிடும்
ஆயுதங்கள் வாய்க்காதே-(2)
உள்ளங்கையில் வரைந்துன்னை
உயர்த்தி மகிழ்ந்திடுவேன்
கலங்காதே நெஞ்சமே
-அதிகாலை நேரம்
1.பாவசாபம் உன்னை வந்து மூடினபோது
பரிசுத்தமாய் வாழச் சொல்லி வழிகாட்டினார்- (2)
நோயின் பிடியில் நீ உழன்றுத் தவித்தபோது
விடுதலை கொடுத்து உன்னை வாழச் செய்திட்டார்- (2)
நெஞ்சமே…ஓ நெஞ்சமே….
2.கடன்பாரம் உன்னை வந்து வாட்டினபோது
கலங்காதே என்று சொல்லி எனை தேற்றினார்-(2)
ஜெயம் நிறைந்த வாழ்க்கையை உனக்குத் தந்து
ஆசீர்வாதத்தால் உன்னை நிரப்பி மகிழ்ந்தார்-(2)
நெஞ்சமே…ஓ நெஞ்சமே….
3.பாலைவனமான உந்தன் வாழ்க்கையைக் கண்டு
சோலைவனம் ஆக்கினாரே நீதியின் தேவன்-(2)
இனிய கானான் உனக்கு உண்டு என்று சொல்லி
செழிப்பான பாதையிலே நடத்தி மகிழ்ந்தார்-(2)
நெஞ்சமே…ஓ நெஞ்சமே….
-ஏன் கலங்குகிறாய்
1.இருகரம் விரித்தவராய்
இதயத்தை திறந்தவராய்- (2)
ஏங்கி ஏங்கி அழைக்கின்றார்
விரும்பி விரும்பி ஓடி நீ வா- (2)
நம்பி வா….. நம்பி வா…. (2)
பாவத்தை விட்டு எழுந்து வா
உன் சாபத்தை விட்டு எழுந்து வா
– அன்பரின் பாதத்திலே
2.கண்ணீரை துடைத்திடுவார்
நிந்தையை மாற்றிடுவார்-(2)
அழுது அழுது ஏன் நிற்கின்றாய்
எழுந்து எழுந்து ஓடி நீ வா -(2)
– நம்பி வா
3.வியாதியை மாற்றிடுவார்
கடன்தொல்லை தீர்த்திடுவார்-(2)
கலங்கி கலங்கி ஏன் நிற்கின்றாய்
மகிழ்ந்து மகிழ்ந்து ஓடி நீ வா-(2)
– நம்பி வா
1.வாழ்நாளெல்லாம் நீ மகிழ்வுடன் வாழ
கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்-(2)
நன்மையும் கிருபையும் பொழிந்து உன்னை (2)
நீடித்த நாட்களாய் நிலைக்க வைப்பார்
-உன்னை மறப்பேனோ
2.சத்திய வேதத்தை தியானித்திட
வரங்களினால் உன்னை நிரப்பிடுவார்-(2)
கிருபையும் வரங்களும் பொழிந்து உன்னை(2)
அபிஷேகத்தாலே நிரப்பிடுவார்
-உன்னை மறப்பேனே
3.நீதியில்லா இவ்வுலகினிலே
நீதிக்காய் நீயும் அலைகையிலே-(2)
கிருபையும் நீதியும் பொழிந்து உன்னை(2)
ஆர்ப்பரித்தென்றும் மகிழச்செய்வார்
-உன்னை மறப்பேனோ
1.குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லை
வேலை ஸ்தலத்தில் நிம்மதியில்லை
நண்பர் மத்தியில் நிம்மதியில்லை
நிம்மதியே இல்லை
-நிம்மதி எங்கே
2.வியாதியின் மத்தியில் நிம்மதியில்லை
தோல்லியின் மத்தியில் நிம்மதியில்லை
தூங்கும்போதிலும் நிம்மதியில்லை
நிம்மதியே இல்லை
-நிம்மதி எங்கே
3.கடன் பாரத்தால் நிம்மதியில்லை
பாவ வாழ்க்கையால் நிம்மதியில்லை
சாப வாழ்க்கையால் நிம்மதியில்லை
நிம்மதியே இல்லை
-நிம்மதி எங்கே
1.உன் வழிகளெல்லாம் அவரை
நினைத்துகொள்
உன் பாதைகளை செவ்வைப்படுத்தி நடத்துவார்-(2)
உன்னை ஞானியென்று எண்ணிக்கொள்ளாதே
தீமையை விட்டு விலகிடு- ( 2)
– என் மகனே
2.உன் முதற்பலனால் கர்த்தரை கனம்பண்ணு
உன் களஞ்சியம் புரணமாய் நிரம்பிடும்-(2)
உன்னை கடியும்போது சோர்ந்துபோகாதே
சோர்வை நீ விட்டு விலகிடு-( 2 )
-என் மகனே
3.வேதத்தையே தியானித்து ஜெபம் பண்ணு
பயப்படாமல் அதின்படி நடந்திடுவாய்-(2)
திகிலின்போது அஞ்சி விடாதே
அவரையே அண்டி பற்றிக்கொள்-( 2 )
– என் மகனே
1.வியாதியோ துன்பமோ
வேதனை நெருக்கமோ-(2)
எந்தனின் வாழ்க்கையில்
குறுக்கிட முடியாது-(2)
– பயப்படாதே
2.பெருவெள்ளம் சூழ்ந்ததோ
கொடுங்காற்று வீசிற்றோ-(2)
சேதமே அணுகாமல்
உன்னையும் தாங்குவார்
– பயப்படாதே
3.மாறிடும் உலகினில்
மனிதர்கள் பகைக்கையில்-(2)
கரத்தினை நீட்டியே
மார்போடு அனைப்பாரே-(2)
– பயப்படாதே