Anbarae Vol II

கொஞ்ச நேரம் இயேசுவே
என்னோடு பேசும் ஆசையாய் இருக்கிறேன் – (2)
உம்மோடு பேசிட ஆச
உம் குரல் கேட்டிட ஆச – (2)
– கொஞ்ச நேரம்

பேசும் பேசும் – இயேசப்பா என்னோடு பேசும் – (2)
உம் அருகினில் நான் அமர்ந்து
என் வேதனை சொல்லிட ஆச (2)
உம்மோடு நான் நடந்து
உம்மைப் போல் மாறிட ஆச (2)
ஆச…….ஆச…..ஆச…..
– கொஞ்ச நேரம்

தாவீதை போல நானும்
பாடியே துதித்திட ஆச (2)
உம் இதயதிற்கேற்றவனாய்
உம்மிடம் பெயர் வாங்க ஆச (2)
ஆச…….ஆச…….ஆச…..
– கொஞ்ச நேரம்

தானியேல் போல நானும்
மூவேளை ஜெபித்திட ஆச – (2)
தீர்மானம் எடுத்தாலும்
அதில் உறுதியாய் இருந்திட ஆச – (2)
ஆச…….ஆச…….ஆச…..
– கொஞ்ச நேரம்

இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
இகமதில் நம்மை காத்ததினால் (2)
அல்லேலுயா துதி அல்லேலுயா -(4) – இயேசுவின்
இரட்சிப்பை அளித்திடும் நாமம்
இரட்சகர் இயேசுவின் இரட்சண்ய நாமம் – (2)

பாவங்கள் போக்கி சாபங்கள் மாற்றி
பரிசுத்தமாக்கிடும் பரமனின் நாமம் – (2) – இயேசுவின்
கேட்பதை கொடுத்திடும் நாமம்
கேட்பதற்கதிகமாய் செய்திடும் நாமம் – (2)

மனநிறைவோடு மகழ்வுடன் வாழ
மகிழ்ச்சியாய் நம்மை மாற்றிடும் நாமம் – (2) – இயேசுவின்
நோய்களை நீக்கிடும் நாமம்

பேய்களை துரத்திடும் பெரியவர் நாமம் – (2)
ஆகிலம் எங்கிலும் அவர் புகழ் பாடி
அன்பாய் காத்திடும் அன்பரின் நாமம் – (2) – இயேசுவின்

சுதந்தரிப்பாய் நீயும் சுதந்தரிப்பாய்
தேசத்தை நீயும் சுதந்தரிப்பாய் – (2)
பாலும் தேனும் ஓடிடும் கானான்
வாழ்க்கையை நீயும் சுதந்தரிப்பாய் – (2)
– சுதந்தரிப்பாய்

உன்க்கெதிராக எழும்பிடும் ஆயுதம்
ஒருநாளும் வாய்க்காதே வாய்த்திடாதே
அதை நீ அறிவாய் கண்களால் காண்பாய்
தேவனை மகிமைப்படுத்திடுவாய் – (2)
– சுதந்தரிப்பாய்

சத்துரு உன்னை நெருங்கி விடாமல்
தலையை எண்ணையால் அபிஷேகித்தார் – (2)
சந்ததியை அவர் பெருகிடச் செய்வார்
உன்னதங்களிலே அமரச்செய்வார் – (2)
– சுதந்தரிப்பாய்

தாழ்மையில் கிடந்தேன் தனிமையில் தவித்தேன்
கிருபையாய் என்னையும் அணைத்தீரே
தோளில் சுமந்தீர் அன்பை பொழிந்தீர்
சிங்காசனத்தில் அமரச் செய்தீர் – (2)
– சுதந்தரிப்பாய்

கன்மலையே ஞானக் கன்மலையே (2)
ஐங்காயம் ஏற்ற அன்பு கன்மலையே
எனக்காக அடிக்கப்பட்டீரே
இரத்தம் நதிகளாய் புரண்டு வந்ததே – (2)
இயேசுவே அந்த கன்மலை – (2)
– கன்மலையே

ஜீவநதியாய் பாய்ந்து வாருமே
ஜீவன் பெறவே உம்மை நாடினேன் – (2)
– எனக்காக அடிக்கப்பட்டீரே

ஆசீர்வாதத்தால் என்னை நிரப்பி
ஆவி வல்லமை தந்து மகிழ்கின்றீர் – (2)
– எனக்காக அடிக்கப்பட்டீரே

உலர்ந்த எலும்புகள் உயிரடையவே
பேரின்பத்தினால் என்னை நிறைத்தீரே – (2)
– எனக்காக அடிக்கப்பட்டீரே

நீரில்லாத வாழ்வினிலே நிம்மதியில்லை
நீரில்லாத வாழ்வு வெறும் கானல் நீரே (2)
புரியவில்லை தேவா புரிந்தவரே வாராய் – (2)
– நீரில்லாத

மனிதனை நம்பி நம்பி மதிக்கெட்டு போனேன்
பேரிழந்த மரம்போல் மண்ணில் சாய்ந்தேன்
புரியவில்லை தேவா புரிந்தவரே வாராய் – (2)
– நீரில்லாத

பாவத்தை தண்ணீர்போல் பருகி நானும் பார்த்தேன்
பாலைவனமாக நானும் மாறிப்போனேன் – (2)
புரியவில்லை தேவா புரிந்தவரே வாராய் – (2)
– நீரில்லாத

வியாதியில் நான் விழுந்து மனம் நொந்து போனேன்
சோதனை சூழ்கையில் சோர்ந்தும் போனேன்
புரியவில்லை தேவா புரிந்தவரே வாராய் – (2)
– நீரில்லாத

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தேவனே
உம்மை என்றும் பணிந்து நாங்கள் போற்றுவோம் – (2)
போற்றுவோம் நாங்கள் போற்றுவோம்

உம்மை என்றும் பணிந்து நாங்கள் போற்றுவோம் – (2)
எதிரிகளின் சிதறி ஓடிடுவார் உம்மை துதிப்பதனால்
பயங்கள் மாறி வாழ்வினிலே முன்னேறி சென்றிடுவேன் (2)
துதிப்பேன் துதிப்பேன் உம்மைத் துதித்திடுவேன்
புகழ்வேன் புகழ்வேன் உம்மை புகழ்ந்திடுவேன்
– துதிகளில் மத்தியில்

தடைகள் யாவும் நீங்கீடுமே உம்மை துதிப்பதனால்
நினைத்ததை நானும் அடைந்திடுவேன் உந்தன் வல்லமையால் (2)
துதிப்பேன் துதிப்பேன் உம்மைத் துதித்திடுவேன்
புகழ்வேன் புகழ்வேன் உம்மை புகழ்ந்திடுவேன்
– துதிகளில் மத்தியில்

சூழ்நிலை எல்லாம் மாறிடுமே உம்மை துதிப்பதினால்
நன்மையின் ஈவை பெற்றிடுவேன் நன்றி சொல்லிடுவேன்
துதிப்பேன் துதிப்பேன் உம்மைத் துதித்திடுவேன்
புகழ்வேன் புகழ்வேன் உம்மை புகழ்ந்திடுவேன்
– துதிகளில் மத்தியில்

சிலுவையின் நிழலிலே சாய்ந்திளைப்பாறிடு
உலக கவலைகளை மறந்திடுவாயே (2)
புதுபெலன் பெற்றிடுவாயே என் மகனே
புதுபெலன் பெற்றிடுவாயே (2)
சிலுவையே கோர சிலுவையே
உடையுதே உள்ளம் உடையுதே – (2)
– சிலுவையின்

பாவம் நிறைந்த உன் வாழ்வுதனை
பரிசுத்தமாக்கிட மரித்தாரே (2)
கடலைத்தேடும் நதியைப்போல
பாய்ந்தது இரத்தம் சிலுவையிலே -(2)
( சிலுவையிலே )
– சிலுவையே

சாபம் நிறைந்த உன் வாழ்வுதனை
சர்வ வல்லவர் மீட்டாரே – (2)
சத்துரு உன்னை நெருங்கி விடாமல்
செந்நீர் இரத்தமாய் சிந்தினாரே – (2)
( சிந்தினாரே )
– சிலுவையே

வியாதி நிறைந்த உன் வாழ்வுதனை
சுகம் பெலன் தந்து மீட்டாரே – (2)
பளுவாய் சிலுவை அழுத்தினதலே
பரனே தரையில் விழுந்தாரே – (2)
(விழுந்தாரே)
– சிலுவையே

நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
என் தெய்வமே என் இயேசுவே எவ்வளவன்பு வைத்தீர் – (2)
– நான் உம்மை

யோனாவைப் போல நான் இருந்தேன்
உம் தூய வார்த்தை மறுத்துவிட்டேன் – (2)
சேதம் என்றும் என்னை அணுகிடாமல்
நேசரே காத்ததுக் கொண்டீர்
– நான் உம்மை

பேதுரு போல பேசி வந்தீர்
அன்பராம் உம்மை மறுதலித்தேன் -(2)
உம்மை விட்டு நான் தூரப் போனேன்
உம் அன்பை இழந்து விட்டேன் – (2)
– நான் உம்மை

தகப்பன் தன் பிள்ளையை சுமப்பது போல
தயவாய் என்னை சுமந்து வந்தீர் – (2)
தத்தளிக்கும் என் வாழ்க்கையிலே
படகாய் நீர் இருந்தீர் – (2)
– நான் உம்மை

நன்றி சொல்வி பாட வந்தேன்
நல்லவராம் இயேசுவையே (2)
செய்த நன்மை ஆயிரங்கள்
சொல்லி சொல்லி பாடவந்தேன்
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
– நன்றி சொல்லி

வேதனை பெருகும் போதும்
தள்ளாடி நடந்த போதும் – (2)
துதி பலி செலுத்த வைத்தீர்
அதிசயம் காணச் செய்தீர் – (2)
– நன்றி ஐயா

குப்பையில் இருந்த என்னை
கோபுரத்தில் ஏற்றி வைத்தீர் – (2)
எண்ணில்லா அதிசயங்கள்
என் வாழ்வில் செய்து வந்தீர் – (2)
– நன்றி ஐயா

நம்பிக்கை இழந்த போதும்
நம்பினோர் பகைத்த போதும் – (2)
என் வாழ்க்கைப் படகினிலே
என் இயேசு கூட இருந்தீர் – (2)
– நன்றி ஐயா

உலக ஆசை எல்லாம்
உதறி தள்ளி விட்டு
உயிருள்ள நாட்களெல்லாம்
உமக்காய் ஓட வைத்தீர் – (2)
– நன்றி ஐயா

மகிழ்ச்சியாயிருங்கள் (4)
மன்னவன் இயேசு பிறந்தார்
நானிலம் மீட்டிட பிறந்தார் (2)

பிறந்தார் இயேசு பிறந்தார்
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் (2)
நெகிழப்பட்டு ஒடுக்கப்பட்டாய்
கைவிடப்பட்டு கலங்கி நின்றாய் – (2)

மீட்பர் உன்னை மீட்டெடுத்து
மீண்டும் கானம் பாட செய்தார் – (2)
அல்லேலூயா – (8)

சோதனை உன்னை சூழ்ந்த போது
சோர்வின்றி நீ முன் நடந்தாய் – (2)
நேசர் உன்னை மீட்டெடுத்து
நேசமார்பில் அணைத்துக் கொண்டார் – (2)
அல்லேலூயா – (8)

பாவசேற்றில் நீ வீழ்ந்த போது
பாசம் இழந்து நீ தவித்த போது
மகிமை தேவன் மனமிரங்கி
மகிமையாய் உன்னை நடத்தி சென்றார் – (2)
அல்லேலூயா – (8)
-மகிழ்ச்சியாயிருங்கள்



Recent Updates

Social Media

Quick Links