1. தாயைப் போல் என்னைத் தேற்றினீரே
தகப்பனைப் போல் என்னை சுமந்தீரே (2)
உள்ளங்கையில் எனை வரைந்தீரே
உயர்ந்த அடைக்கலத்தில் வைத்தீரே (2)
நன்றி சொல்கிறேன் பாடித் துதிக்கின்றேன் (2)
– நீரே என் தேவன்
2. நிந்தை அவமானம் மாற்றினீரே
கண்ணீர் கவலைகள் துடைத்தீரே (2)
வெட்கப்படுத்தாமல் நடத்தினீரே
பெயரை பெருமைப் படுத்தினீரே (2)
நன்றி சொல்கிறேன் பாடித் துதிக்கிறேன் (2)
– நீரே என் தேவன்
3. பாவ சேற்றினின்று தூக்கினீரே
சாபவாழ்வினின்று மீட்டீரே (2)
கடன்கள் யாவையும் மாற்றினீரே
நோய்கள் யாவையும் தீர்த்தீரே – என் (2)
நன்றி சொல்கிறேன் பாடித் துதிக்கிறேன் (2)
– நீரே என் தேவன்
1. கர்ப்பத்தின் கனிகளுக்கு இரங்கிடுவார்
பிள்ளைகளின் பிள்ளைகளை ஆசீர்வதிப்பார் (2)
ஒலிவ மர கன்றுகள் போல் செழிக்க செய்வார்
சமாதான பாதையிலே நடத்திடுவார் (2)
– நன்றி சொல்லுவேன்
2. ஏற்ற காலம் உன்னை என்றும் உயர்த்திடும்படி
கை செய்யும் காரியத்தை ஆசீர்வதிப்பார் (2)
வானத்தை உனக்காக திறந்திடுவார்
நிறைவான விளைச்சலை கொடுத்திடுவார் (2)
– நன்றி சொல்லுவேன்
3. ஜீவன் சுகம் பெலன் தந்து உன்னை நடத்துவார்
பெலவீனம் யாவையும் நீங்கிட செய்வார் (2)
கீர்த்தியோடும் புகழ்ச்சியோடும் வாழ்ந்திட செய்வார்
சந்தோஷம் உன் வாழ்வில் தந்திடுவார் (2)
– நன்றி சொல்லுவேன்
1. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை என்னை தொடர்ந்திடுமே
கர்த்தரது வீட்டினிலே
என்றென்றும் நிலைத்திருப்பேன்
– என்னை கைவிடவே
2. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உந்தன் வரங்களால் என்னை நிரப்பிடுமே
கர்த்தரது ஆலயத்தில்
தங்கியே தரித்திருப்பேன்
– என்னை கைவிடவே
3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் – சுக
பெலத்தால் என்னை நிரப்பிடுமே
இஸ்ரவேலின் நடுவிலே
நீடித்து வாழ்ந்திருப்பேன்
– என்னை கைவிடவே
1. பெலவீன நேரத்தில் பெலன் தருவார்
ஆபத்து காலத்தில் தாங்கிடுவார் (2)
மரண இருளில் நான் நடந்திட்டாலும்
மன்னராம் இயேசு உடனிருப்பார் (2)
-அன்பரின் பாதத்தில்
2. பாவியாம் என்னையும் மீட்டெடுத்தார்
பாவங்கள் யாவையும் நீக்கிவிட்டார் (2)
பரலோக வாழ்வில் என்னையும் சேர்க்க
பரமன் இயேசு பலியானார் (2)
-அன்பரின் பாதத்தில்
3. அதிசயம் என் வாழ்வில் செய்திடுவார்
அற்புதம் காண உதவி செய்வார் (2)
வார்த்தையாம் மன்னாவை அனுதினம் தந்து
வல்லமையாக நடத்திடுவார் (2)
-அன்பரின் பாதத்தில்
1. வாக்குத்தத்தம் யாவையும் நிறைவேற்றினீர்
வாக்கு மாறா தேவனாய் கூட இருந்தீர் – (2)
– உம்மை மறக்க முடியுமா
2.அனாதையாய் அலைந்து நான் திரிந்த வேளையில்
ஆதரவு தந்து எனக்கு வாழ்வு கொடுத்தீர் (2)
– உம்மை மறக்க முடியுமா
3. மன அழுத்தம் யாவையும் மாற்றிவிட்டீர்
அழாதே என்று சொல்லி அரவணைத்தீர் (2)
1. ஆதி மெய் தெய்வமே உமக்கு ஸ்தோத்திரமே
பிதாவின் குமாரனே உமக்கு ஸ்தோத்திரமே (2)
உமக்கு ஸ்தோத்திரமே, உமக்கு ஸ்தோத்திரமே (2)
-என் உயிரே
2.வாழ்வு தந்தவரே உமக்கு ஸ்தோத்திரமே
வியாதியை மாற்றினீரே உமக்கு ஸ்தோத்திரமே (2)
உமக்கு ஸ்தோத்திரமே, உமக்கு ஸ்தோத்திரமே (2)
-என் உயிரே
3. ஜீவ நதியே உமக்கு ஸ்தோத்திரமே
ஜீவ தண்ணீரே உமக்கு ஸ்தோத்திரமே (2)
உமக்கு ஸ்தோத்திரமே, உமக்கு ஸ்தோத்திரமே (2)
-என் உயிரே
1. வியாதியின் நேரத்தில் எல்லாம்
விடுதலை தருவீரே நாதா (2)
பெலவீன நேரத்தில் எல்லாம்
பெலத்தால் தாங்குவீர் நாதா (2)
அல்லேலூயா (4)
அல்லேலூயா அல்லேலூயா (4)
2. கூப்பிடும் நேரத்தில் எல்லாம்
குரல்தனை கேட்டீரே நாதா (2)
ஆவியின் அபிஷே”கம் ஈந்து
அனல் மூட்டி எழுப்பிடும் நாதா (2)
அல்லேலூயா அல்லேலூயா (4)
3. சோர்ந்த நேரத்தில் எல்லாம்
சோர்வுகள் மாற்றினீர் நாதா (2)
கண்ணீரின் பாதையில் எல்லாம்3
ஆறுதல் தருவீரே நாதா (2)
-அல்லேலூயா அல்லேலூயா (4)
1. தண்ணீரை கடக்கும் போதும்
அக்கினியில் நடக்கும் போதும் (2)
சுழ்நிலைகள் அறிந்த தேவன்
உன்னை காத்து நடத்துவார் (2)
-உன்னை விசாரிப்பார்
2. உறவுகள் வெறுத்திட்டாலும்
உதறியே தள்ளிட்டாலும் (2)
கைவிடா நேசர் உன்னை
கரம் பிடித்து நடத்துவார் (2)
-உன்னை விசாரிப்பார்
3. கண்ணீரின் பாதையிலே
கதறி நீ துடிக்கையிலே (2)
கலங்காதே என்று சொல்லி
தம் மார்போடு அணைப்பாரே
-உன்னை விசாரிப்பார்
1. வியாதியினாலே சோர்ந்து போனாயோ
கடன் பாரத்தாலே கலங்கி நின்றாயோ
அவைகளை மாற்றிடும் வல்;ல தேவன் உண்டு
வலக்கரத்தால் உன்னை என்றும் தாங்கிடுவார் (2)
– ஆ ஆ அல்லேலூயா
2. தாயின் அன்பு மாறிப் போனதோ
சொந்த பந்தம் ஒதுங்கிப் போனதோ
சேனைகளின் கர்த்தர் யுத்தம் செய்து இன்று
சேதமின்றி உன்னை காத்திடுவார் (2)
-ஆ ஆ அல்லேலூயா
3. சூழ்நிலைகள் இன்று மாறிப் போனதோ
நிந்தை அவமானம் உனை சூழ்ந்ததோ
பறந்து காக்கும் பட்சி போல வந்து பரம தேவன்
உன்னை காத்திடுவார் (2)
-ஆ ஆ அல்லேலூயா
1. எதிரியின் சூழ்ச்சிகள் வஞ்சனைகள்
எல்லாம் அறிந்திடுவார் — இயேசு (2)
விழுந்து விடாமல் தப்புவித்து
நிச்சயம் மீட்டிடுவார் இயேசு
-குறித்த (2)
2. தகப்பன் பிள்ளைக்கு இரங்குதல் போல்
உனக்கு இரங்கிடுவார் — இயேசு (2)
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால்
நிச்சயம் நிரப்பிடுவார் உன்னை
— குறித்த (2)
3. திக்கற்ற பிள்ளைக்கு இரங்கிடுவார்
நிம்மதி அளித்திடுவார் இயேசு — (2)
ஒடுக்கப்பட்டோரை மீட்டிடுவார்
நிச்சயம் விடுவிப்பார் இயேசு
-குறித்த (2)