1. கண்ணீரைத் துடைத்திடுவாரே உன் நிந்தைகளை மாற்றிடுவாரே
கண்ணீரைத் துடைத்திடுவாரே உன் நிந்தைகளை மாற்றிடுவாரே
அணைத்துக்கொள்ளுவார் சேர்த்துக்கொள்ளுவார் (2)
ஆற்றித் தேற்றுவார் ஆற்றித்தேற்றுவார்
…ஆறுதலை
2. நோய்களெல்லாம் மாற்றிடுவாரே உன் சோர்வையெல்லாம் நீக்கிடுவாரே
நோய்களெல்லாம் மாற்றிடுவாரே உன் சோர்வையெல்லாம் நீக்கிடுவாரே
சோர்வை மாற்றுவார் சுகத்தைத் தருவார் (2)
விடுதலை கொடுப்பார் விடுதலை கொடுப்பார்
… ஆறுதலை
3. பாவமெல்லாம் போக்கிடுவாரே உன் சாபமெல்லாம் நீக்கிடுவாரே
பாவமெல்லாம் போக்கிடுவாரே உன் சாபமெல்லாம் நீக்கிடுவாரே
இருளை மாற்றுவார் வெளிச்சம் தருவார் (2)
உயர்த்தி மகிழுவார் உயர்த்தி மகிழுவார்
… ஆறுதலை
1. எந்தன் செயல்களெல்லாம் அருமையானவைகள்
வாழ்வில் ஒளியேற்றி வளம்பெறச் செய்பவைகள் (2)
வளம்பெறச் செய்பவைகள்
-பார்வைக்கு அருமையானவன்
2. எந்தன் வாக்குத்தத்தம் அருமையானவைகள்
உலர்ந்த எலும்புகளை உயிர்பெறச் செய்பவைகள் (2)
-பார்வைக்கு அருமையானவன்
3. எந்தன் யோசனைகள் அருமையானவைகள்
எண்ணவே முடியாத மணலைப் போன்றவைகள் (2)
-பார்வைக்கு அருமையானவன்
1. பஞ்சத்தின் காலத்தில் கூப்பிட்டபோது
விளைச்சலைக் கொடுத்து விருத்தியைக் கொடுத்தீர் (2)
பலனைக் கொடுத்து வாழ வைத்தீரே
பெலவானாய் என்னை மாற்றிவிட்டீரே (2)
-காலங்கள் மாறினாலும்
2. ஆபத்துக் காலத்தில் கூப்பிட்டபோது
விடுவிப்பேன் என்று வாக்குரைத்தீரே (2)
மகிமைப்படுத்தி மகிழச் செய்தீரே 2
திருப்தியாக வாழச் செய்தீரே (2)
-காலங்கள் மாறினாலும்
3. இக்கட்டுக் காலத்தில் கூப்பிட்டபோது
நெருங்கியே வந்து உதவிகள் செய்தீர் (2)
மீட்பின் வாழ்வை எனக்குத் தந்தீரே
அடைக்கலமானீர் தஞ்சமுமானீர் (2)
-காலங்கள் மாறினாலும்
1. நிலையான அன்பு மேலான அன்பு
தெவிட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு (2)
கண்ணீரைத் துடைக்கும் பாவங்கள் போக்கும்
நிந்தைகள் மாற்றும் உம் வல்ல அன்பு (2)
2.சாத்தானை ஜெயிக்கும் கட்டுகளை உடைக்கும்
கடன்களை மாற்றும் அதிசய அன்பு (2)
நிலையான அன்பு மேலான அன்பு
தெவிட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு (4)
1. நீதியின் பாதையிலே என்னை நிதமும் நடத்தினாரே (2)
களஞ்சியம் யாவையும் பலனால் நிரப்பி
போஷித்துக் காத்தீரே – நிதமும்
போஷித்துக் காத்தீரே
-எண்ணி முடியாத
2. நன்மையின் ஈவுகளால் என்னை நாள்தோறும் நிரப்பினாரே (2)
எண்ணின காரியம் யாவையும் முடித்து
நலமாய் காத்தாரே – நிதமும்
நலமாய் காத்தாரே
-எண்ணி முடியாத
1. சாபங்கள் எல்லாம் ஆசீர்வாதமாய்
மாறிப்போய்விடும் உந்தன் அன்பினால் (2)
உங்க அன்பு மட்டும் இல்லையென்றால் உலகம் இல்லையே
உங்க அன்பு மட்டும் இல்லையென்றால் நானும் இல்லையே (2)
இறைவா இறைவா இறைவா (2)
-தேவ சித்தம்
2. கிருபையினாலும் இரக்கத்தினாலும்
இரங்குகின்றவர் நமது ஆண்டவர் (2)
உங்க அன்பு மட்டும் இல்லையென்றால் உலகம் இல்லையே
உங்க அன்பு மட்டும் இல்லையென்றால் நானும் இல்லையே (2)
இறைவா இறைவா இறைவா (2)
-தேவ சித்தம்
3. வியாதிகளெல்லாம் மறையப்பண்ணுவார்
விடுதலை கொடுப்பார் நமது ஆண்டவர் (2)
உங்க அன்பு மட்டும் இல்லையென்றால் உலகம் இல்லையே
உங்க அன்பு மட்டும் இல்லையென்றால் நானும் இல்லையே (2)
இறைவா இறைவா இறைவா (2)
-தேவ சித்தம்
1. ஆபத்து நேரம் அழைத்த போது விடுதலை அளிக்கின்றீர்
சிறையிருப்பை எடுத்துப்போட்டு சிறப்பாய் காக்கின்றீர் (2)
சிறப்பாய் காக்கின்றீர்
…உம்மை நோக்கிப்
2. சிறுமைதனை நோக்கிப் பார்த்து உயர்வைக் கொடுக்கின்றீர்
வாஞ்சைதனை தீர்த்து வைத்து வாழ வைக்கின்றீர் (2)
வாழ வைக்கின்றீர்
…உம்மை நோக்கிப்
3. குடும்பங்களை காக்கும்படி கூடவே இருக்கின்றீர்
இழந்துபோன அனைத்தையுமே இன்றே தருகின்றீர் (2)
இன்றே தருகின்றீர்
…உம்மை நோக்கிப்
1. வேதத்தை தியானிக்க நானும் மறந்தேன்
உம்மைத் துதிக்க நான் மறந்தேன் (2)
இயேசுவே நீர் என்னை மறப்பீரோ
உம் அன்பு என்றும் பெரிதன்றோ
உம் அன்பு என்றும் பெரிதன்றோ (2)
…எந்தன் இயேசுவே
2. வேலை நாட்களில் உம்மைத் தேட மறந்தேன்
துக்க நாட்களில் உம்மைத் தேடுகிறேன் (2)
இயேசுவே எனக்கு யாருண்டு
உம்மைப் போல் என்னை நேசிக்க
உம்மைப் போல் என்னை நேசிக்க(2)
…எந்தன் இயேசுவே
1. வலப்பக்கம் இடப்பக்கமாய் இடங்கொண்டு பெருகிடுவாய்
பாழான பட்டணத்தை செழிப்பாய் மாற்றிடுவார் (2)
பாழான பட்டணத்தை செழிப்பாய் மாற்றிடுவார்
…உங்கள் ராஜா
2. குடும்பத்தின் போராட்டங்கள் மறைந்திட உதவிசெய்வார்
கோடா கோடியாக பெருகிடச் செய்திடுவார் (2)
கோடா கோடியாக பெருகிடச் செய்திடுவார்
…உங்கள் ராஜா
3. பிள்ளைகள் அனைவரையும் அணைத்து மகிழ்ந்திடுவார்
பரலோக இராஜ்ஜியத்தில் சிறப்பாய் சேர்த்திடுவார் (2)
பரலோக இராஜ்ஜியத்தில் சிறப்பாய் சேர்த்திடுவார்
…உங்கள் ராஜா
1. நதியோரம் வளர்கின்ற விருட்சங்கள் போல்
கனிதரும் மரமாய் செழித்திருப்பாய் (2)
புதுப்புது கனிகளைக் கொடுத்திடுவாய்
புகழுடன் என்றும் வாழ்ந்திடுவாய் (2)
…மகிழ்ந்திடுவேன்
2. துன்பத்தின் நாட்களும் மறைந்துவிடும்
திருப்தியாய் உலகினில் வாழ்ந்திடுவாய்( 2)
புதுப் புது கிருபை பெற்றிடுவாய்
மகிழ்ச்சியாய் என்றும் வாழ்ந்திடுவாய் (2)
…மகிழ்ந்திடுவேன்
3. மதில்களை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளை நீயும் தகர்த்திடுவாய் (2)
புதுப் புது வரங்களைப் பெற்றிடுவாய்
மேன்மையாய் என்றும் வாழ்ந்திடுவாய் (2)
…மகிழ்ந்திடுவேன்